செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை குத்தகைக்கு விடக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
12:50 May 27
சென்னை: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு குத்தகைக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
செங்கல்பட்டில் ரூ. 700 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருக்கும் மத்திய அரசின் ஒருங்கிணைந்தத் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை தமிழ்நாடு அரசுக்கு குத்தகைக்கு வழங்கும்படி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சரின் கடிதத்தை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் மத்திய சுகாதார துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து வழங்கினார்.
அந்த கடிதத்தில், "மத்திய அரசு தடுப்பூசி தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பெரிய கட்டடத்தை கட்டியது. எனினும் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கவில்லை. அந்த தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு குத்தகைக்கு அளிக்க வேண்டும்" என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
- செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை மத்திய அரசு, ஒப்பந்த அடிப்படையில் அளிக்க வேண்டும்.
- இதன்மூலம் உடனடியாக தடுப்பூசி உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- தடுப்பூசி உற்பத்தி மையத்தை முழு சுதந்திரத்துடன இயக்க அனுமதி அளிக்க வேண்டும்.
- தனியார் நிறுவன உதவியுடன் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்படுத்துவோம்.