தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இயல்பு நிலைக்கு திரும்பும் முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி - minister

முக சிதைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி தான்யாவின் முகம் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் புகைப்படத்தை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பும் முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி
இயல்பு நிலைக்கு திரும்பும் முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி

By

Published : Sep 5, 2022, 9:44 PM IST

சென்னை:ஆவடி வீராபுரத்தை சேர்ந்த 9 வயது தான்யா முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் முக சிதைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி தான்யா முகம் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் புகைப்படத்தை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

அச்சிறுமி தொடர்ந்து சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குழந்தையாக பார்க்கப்பட்டு வந்தார். இதனால் சிறுமி மற்றும் அவரது பெற்றோர் மிகவும் துன்பத்துக்கு ஆளாகினர். இது குறித்து தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் சிறுமியின் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பாலவளத்துறை அமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். அதன்படி சிறுமி தான்யா கடந்த 17 ஆம் தேதி தண்டலம் சவீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு கடந்த 23 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இயல்பு நிலைக்கு திரும்பும் முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி

10 மருத்துவர்கள் தொடர்ந்து 10 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தொடர்ந்து அவரச சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். அவரது உடல் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்ததால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து சாதாரண வார்டில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சிறுமியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அமைச்சர் நாசரிடம் தான்யா முகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் வெள்ளி அன்று தான்யா
வீட்டிற்கு செல்லவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே சிறுமி சிகிச்சைக்கு முன் அவரது முகம் எப்படி இருந்தது சிகிச்சைக்கு பின் முகம் எப்படி உள்ளது என்பதை விலக்கும் வகையில் உள்ள புகைப்படத்தை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளி மாணவி பள்ளிப்பேருந்திலிருந்து தவறி விழுந்த சம்பவத்தால் பெரும்பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details