இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “ஜெர்மனி மாணவர்கள் இங்குள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வீடுகளில் தங்கி 14 நாட்கள் கலை, பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றை நேரில் அறிந்துகொள்ள உள்ளனர். பொங்கல் திருநாளையும் அவர்கள் இங்கு கொண்டாட உள்ளனர். நமது பள்ளி மாணவர்களும் அவர்களுடன் ஜெர்மனிக்குச் சென்று அங்குள்ள கல்வி, பண்பாடு உள்ளிட்டவற்றை அறியவுள்ளார்கள். இதற்காக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மலேசியா, பின்லாந்து, பிரான்ஸ், ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆண்டுகளில் தமிழக மாணவர்கள் சென்று வந்தனர் “ எனத் தெரிவித்தார்.
தமிழர் கலாசாரத்தை அறிய ஜெர்மானிய மாணவர்கள் தமிழகம் வருகை! - பள்ளிக்கல்வித்துறை
சென்னை: ஜெர்மனியிலிருந்து இந்நாட்டின் கலாசாரம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள 18 மாணவர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர்.
students