தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கஜா பாதித்த பகுதிகள் பழைய நிலைக்கு திரும்ப பத்தாண்டாகும்..!' - ஓ.எஸ்.மணியன் - os manian

சென்னை: "கஜா புயலால் பாதிக்கபட்ட தனது வேதாரண்யம் தொகுதி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப பத்தாண்டுகளாகும்" என, கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

os manian

By

Published : Jul 12, 2019, 7:02 PM IST

கைத்தறித் துறை மானிய கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "கஜா புயலால் பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியது. தனது வேதாரண்யம் தொகுதிக்கு உதவிகரம் நீட்டிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி. முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், அலுவலர்கள் வரை இரவு பகல் பாராமல் கண் விழித்து வீட்டு வாசலுக்கே நிவாரண பொருட்களை கொண்டு வந்து சேர்த்தனர். கஜா புயல் காரணமாக முருங்கை, முந்திரி, சவுக்கு, மா, தென்னை போன்ற மரங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. குடிசை வீடுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து புயலுக்கு முன்னும், பின்னும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இருப்பினும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பழைய நிலைக்கு திரும்ப பத்தாண்டுகளாகும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details