சென்னை:திரைப்படஇயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறிய கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக, இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கி செப்டம்பர் 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து லீனா மணிமேகலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.