சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தகுதி உடைய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த இலவச கல்வி திட்டத்தின் கீழ் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் www.unom.ac.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நடப்பு கல்வியாண்டு முதல், எம்.பில்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாக, நேற்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைப்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:+2 பொதுத்தேர்வு: மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு