இதுதொடர்பாக, ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பழ. கருப்பையா அளித்த சிறப்புப் பேட்டியில், ' ஒரு கட்சி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக தனியார் முகவர்களை பயன்படுத்துவது தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை. எதைச் சொன்னால் மக்கள் வாக்களிப்பார்கள் என்று மக்களை ஏமாற்றும் யுக்திகளை அந்நிறுவனங்கள் பின்பற்றுவார்கள். இது நம் நாட்டு அரசியலுக்கு நல்லதல்ல. நடிகையை வைத்து சோப்பை விளம்பரப்படுத்துவது போல் கார்ப்ரேட் முகவர்களை வைத்து கட்சிகளை விளம்பரம் செய்வது தவறு. உண்மை இல்லாத ஒன்றை உண்மை போல், தோற்றம் செய்வது கார்ப்ரேட்டின் செயல்கள் ' எனத் தெரிவித்தார். மேலும்,
' அரசியல் என்பது கொள்கை சார்ந்து இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் வணிக நிறுவனங்கள் இல்லை. மக்களின் அதிருப்திப் போக்கை ஆய்வுகள் மூலம் அறிய முடியும். திமுகவின் அடிப்படைக் கொள்கை, மொழி சார்ந்து தான். ஆனால், முன்பு இருந்த முனைப்பு தற்போது திமுகவிடம் இல்லை.