நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டு போட முயன்றதாக அதிமுகவினர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் திமுக உறுப்பினர் ஒருவரை தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனை, தொடர்ந்து கள்ள ஓட்டு போட வந்த திமுக நபரை பிடித்து கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ராயபுரம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அத்துமீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 110 அதிமுகவினர் மீது அரசு அதிகாரி உத்தரவை மதிக்காமல் நடத்தல், தொற்று நோய் பரப்பும் சட்டம், காவல்சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் ராயபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.