எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் 1983-87ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு டிஜிபியாக இருந்தவர் கே. ராதாகிருஷ்ணன். இவர் சென்னை போக்குவரத்து துணை ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையராகவும் திறம்பட பணியாற்றியவர். இவரது காலத்தில்தான், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது. இதற்காக ஜப்பான் சென்ற ராதாகிருஷ்ணன், அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசித்து வந்த பின்பு கட்டப்பட்டதுதான் அண்ணா மேம்பாலம்.
முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்த ராதாகிருஷ்ணன், நேர்மையான அதிகாரியாக அனைவரது பாராட்டையும் பெற்றவர். வயது முதிர்வான சூழலில், கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வயிற்றில் புற்று நோய்க்கட்டி ஏற்பட்டு, அவதிப்பட்டு வந்த ராதாகிருஷ்ணன், இன்று அதிகாலை சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.