தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜகவிற்கு படையெடுக்கும் ஸ்டார்கள்: கட்சியில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண்! - bjp election moves

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் பாஜக கட்சியில் அதன் மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் இணைந்தார்.

Former Cricket palyaer sivaramakrishnan joins in BJP
Former Cricket palyaer sivaramakrishnan joins in BJP

By

Published : Dec 30, 2020, 4:04 PM IST

சென்னை: பாஜக கட்சியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தன்னை அடிப்படை உறுப்பினராக இன்று இணைத்துக்கொண்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி மேற்கு வங்கத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அறிமுகமானவர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன். சுழற்பந்து வீச்சாளரான இவர் இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இதில் டெஸ்ட்டில் 130 ரன்களும், 26 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ள அவர், ஒருநாள் போட்டிகளில், 15 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 64 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளும் கைப்பற்றியது இவரது சிறந்த ஆட்டமாகக் கருதப்படுகிறது.

இவர் கடைசியாக 1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவர், 1987ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார்.

பின்னர் ஓய்வை அறிவித்த அவர், அதன் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (டிச., 30), பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில், லட்சுமண் சிவராமகிருஷ்ணன் அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details