தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீதிமன்றத்தில் தேதி முத்திரையைத் திருடிய முன்னாள் உதவியாளர் கைது - தேதி முத்திரையைத் திருடிய முன்னாள் உதவியாளர் விவேகானந்தன்

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் புகுந்து தேதி முத்திரையைத் திருடிய முன்னாள் உதவியாளரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

former-aide-arrested-for-stealing-date-stamp-in-egmore-court எழும்பூர் நீதிமன்றத்தில் தேதி முத்திரையைத் திருடிய முன்னாள் உதவியாளர் கைது
former-aide-arrested-for-stealing-date-stamp-in-egmore-court எழும்பூர் நீதிமன்றத்தில் தேதி முத்திரையைத் திருடிய முன்னாள் உதவியாளர் கைது

By

Published : May 4, 2022, 8:07 AM IST

சென்னை:எழும்பூர் 6ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மொழிப்பெயர்ப்பாளராக பணியாற்றி வருபவர் மதுரவல்லி. இவர் தனது மேஜை மீது வைத்திருந்த தேதி முத்திரையைக் காணவில்லை என நேற்று முன்தினம் (மே.2) பல இடங்களில் தேடிய போதும் கிடைக்கவில்லை.

இதனால், நீதிமன்றத்திற்குள் இருந்த சிசிடிவி பதிவுகளை அவர் ஆய்வு செய்தபோது ஒரு நபர் நீதிமன்றத்திற்குள் புகுந்து தேதி முத்திரையைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து, தேதி முத்திரையைத் திருடிய நபர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் மதுரவல்லி புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, திருட்டில் ஈடுபட்ட நபரைக் கைது செய்தனர். அதன் பின்னர், அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் சைதாப்பேட்டை தாடண்டர் நகரைச் சேர்ந்த விவேகானந்தன்(48) என்பதும், அவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் எழும்பூர் நீதிமன்றத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

தேதி முத்திரையைத் திருடிய முன்னாள் உதவியாளர் விவேகானந்தன்

மேலும், நீதிமன்றத்திற்குச் சொந்தமான மதுபாட்டிலை திருடியதற்காக விவேகானந்தன் கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. விசாரணையில், நீதிமன்றத்திற்குள் புகுந்து தேதி முத்திரையையும் திருடியதாக காவலர்களிடம் விவேகானந்தன் ஒப்புக்கொண்டார்.

மேலும், எழும்பூர் நீதிமன்றத்தில் பணிபுரியக்கூடிய இரு வழக்கறிஞர்கள் தன்னிடம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட மேஜிஸ்ட்ரேட் ஒருவரின் பெஞ்சில் இருந்து தேதி முத்திரையைத் திருட கூறியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கறிஞர்களைப் பிடித்து விசாரணை நடத்திய போது சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட மேஜிஸ்ட்ரேட்டின் கையெழுத்தைப் போலியாக பதிவிட்டு, தேதி முத்திரையைத் திருடி ஆணை பத்திரம் (affidavit) சமர்ப்பிக்க இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

எழும்பூர் 6ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம்

அதனைத் தொடர்ந்து, விவேகானந்தன் மீது திருட்டு உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் எழும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட தேதி முத்திரையை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். பின்னர் விவேகானந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவரை நீதிமன்ற உத்தவுப்படி சிறையில் அடைத்தனர். முத்திரையைத் திருட சொன்ன இரு வழக்கறிஞர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: அரசு அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - உயர் நீதிமன்றம்

For All Latest Updates

TAGGED:

Court theft

ABOUT THE AUTHOR

...view details