இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”கடந்த மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் (ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்றவர்கள்), வரும் ஜூனில் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத் தேர்வில் பங்குகொள்ளலாம்.
தேர்வர்களின் நலன் கருதி சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசு தேர்வுத்துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், வரும் மே 13, 14 ஆகிய தேதிகளில் நேரில் சென்று ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் அவர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.