சென்னையிலிருந்து ஹாங்காங்கிற்கு 234 பயணிகளுடன் இன்று காலை 5.50 மணிக்கு புறப்பட்டுச் சென்ற கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் காலை 6.20 மணிக்கு சென்னையில் அவசரமாகத் தரையிறங்கியது.
விமானத்தில் சிறுமிக்கு திடீர் மூச்சு திணறல்; நடந்தது என்ன!? - சிறுமியின் மூச்சு திணறலால் தரையிறங்கிய விமானம்
சென்னை: சென்னையிலிருந்து ஹாங்காங் புறப்பட்ட விமானத்தில் இருந்த சிறுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, மீண்டும் புறப்பட்டது.
சிறுமி
என்ன காரணம் என்று விசாரிக்கையில், விமானத்தில் பயணம் செய்த சஹானா (7) என்ற சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. பின்னர் சிறுமியுடன் சேர்ந்து அவரது பெற்றோர் உள்ளிட்ட மூன்று பயணிகளை கீழே இறக்கி மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு மீண்டும் 7.45 மணிக்கு 231 பயணிகளுடன் விமானம் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றது.