தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் மீண்டும் தொடங்கிய விமான சேவைகள்

சென்னை விமான நிலையத்தில் கனமழை எதிரொலியாக ஐந்து மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

சென்னை விமான நிலையம், CHENNAI AIRPORT
சென்னை விமான நிலையம்

By

Published : Nov 11, 2021, 7:23 PM IST

சென்னை:சென்னையில் பெய்த கனமழை, அதிக காற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால், விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ.11) பகல் 1.15 மணியில் இருந்து மாலை 6 மணி வரை விமானங்கள் வந்து தரையிறங்க இந்திய விமானநிலைய ஆணையம் தடைவிதித்தது.

தடை விலக்கப்பட்டது

அதன்படி, அங்கு இன்று மாலை 6 மணி வரை எந்த விமானமும் வந்து தரையிறங்கவில்லை. ஆனால், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கின.

இந்நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் மாலை 6 மணியுடன் தடையை விலக்கிக் கொண்டதையடுத்து புனேவிலிருந்து முதல் விமானம் 65 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 6.18 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சோ்ந்தது.

திரும்பும் 14 விமானங்கள்

பின்னர், டெல்லி, மும்பை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதேபோல், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, ஹைதராபாத் திரும்பி சென்ற 14 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு வரவிருக்கின்றன.

இதையும் படிங்க: Puneeth Rajkumar: தாயைப் பிரிய மறுக்கும் யானைக்குட்டி - உருக்கமான காணொலி

ABOUT THE AUTHOR

...view details