தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'றெக்கை கட்டி பறக்கும் தமிழ்' - இனி தமிழ் மொழியிலும் விமான அறிவிப்புகள் - விமானங்களில் தமிழ் மொழியில் அறிவிப்புகள் வெளியிட மத்திய அமைச்சகம் உத்தரவு

சென்னை; விமானங்களில் தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் அறிவிப்புகள் வெளியிட உத்தரவிட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழியிலும் விமான அறிவிப்புகள்
தமிழ்மொழியிலும் விமான அறிவிப்புகள்

By

Published : Jan 20, 2020, 10:39 PM IST


விமான நிலையங்களில் ஆங்கிலம் அல்லாமல் மற்ற உள்ளூர் மொழிகளிலும் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துவந்தது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் பூரிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, வெளிநாடு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதத்திற்கு தற்போது மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி பதிலளித்துள்ளார்.

அதில், விமானங்களில் ஹிந்தி, ஆங்கிலம் அல்லாத உள்ளூர் மொழிகளில் அறிவிப்பு வெளியிட மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளதாகவும், இனி எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் விமானங்களில் தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க;

ரேஷன் கார்டுக்கு ரூ.900 வழங்கப்படும்: சமூகநலத் துறை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details