தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுகவிலிருந்து 5 பேர் நீக்கம் - sasikala

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவிலிருந்து ஐந்து பேர் நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து  5 பேர் நீக்க
அதிமுகவில் இருந்து 5 பேர் நீக்க

By

Published : Jun 24, 2021, 12:50 PM IST

இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் ராமகிருஷ்ணன், சிவகங்கை ஆர். சரவணன், ஆர். சண்முகப்பிரியா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் ராஜகோபால், டி. சுந்தர்ராஜ் ஆகியோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும்விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் இவர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து 5 பேர் நீக்கம்

இவர்கள் ஐந்து பேரும் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதால் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details