சென்னை:துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது இரண்டு பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அலுவலர்கள் இருவரையும் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அலுவலர்கள் அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.