கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவு மீறுபவர்களை காவல் துறையினர் கண்காணித்து வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 50 நாள்களில், தடையை மீறியதாக நான்கு லட்சத்து 63 ஆயிரத்து 513 பேரை காவல் துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது. மேலும், மூன்று லட்சத்து 82 ஆயிரத்து 588 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.