தலைமைச் செயலகத்தில் இன்று, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி ஆகிய புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலகங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து மெரினா கடற்கரை தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளதாலும், விழாக்காலங்களை முன்னிட்டு கடற்கரைக்கு மக்களின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதாலும், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடி மீட்பு நடவடிக்கைக்காக மெரினா மீட்புப்பணிகள் நிலையத்தின் பயன்பாட்டிற்காக கொள்முதல் செய்யப்படவுள்ள 2 நீர் ஊர்திகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் இயங்கும் ஊர்திகள் ஆகியவற்றின் செயல்பாட்டினை விளக்கும் குறும்படத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.