தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தின்னர் தொழிற்சாலையில் தீ விபத்து - தின்னர் தொழிற்சாலை

தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Oct 7, 2021, 10:32 AM IST

சென்னை: தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள பரமேஸ்வரர் நகரில் தனியாருக்குச் சொந்தமான தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது.

இந்நிலையில், நேற்று (அக். 6) இரவு சுமார் 11.30 மணியளவில் ஆலையிலிருந்து கரும்புகை மூட்டத்துடன் தீ வெளியாவதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து, ஏழு தீயணைக்கும் வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறை வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.

மொத்த பொருள்களும் நாசம்

நல்வாய்ப்பாக இந்தத் தீ விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. மேலும் தொழிற்சாலையில் இருந்த பொருள்கள் மட்டும் தீயில் கருகி நாசமாகின. இந்தத் தீ விபத்தில் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை மட்டுமல்லாது அதன் அருகில் இருந்த சோஃபா தயாரிக்கும் தொழிற்சாலையும் முழுவதும் எரிந்து நாசமாகின.

தொழிற்சாலையில் தீ விபத்து

இப்பகுதியில் செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளில் ஏற்கனவே இது மாதிரியான தீ விபத்து அடிக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் இதுபோன்ற தொழிற்சாலைகளை இந்தப் பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் ரகளை: தட்டிக்கேட்ட காவலருக்கு கத்திகுத்து

ABOUT THE AUTHOR

...view details