தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் ஐஏஎஸ் பாலியல் புகார் விசாரணை: அரசிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: பெண் ஐஏஎஸ் அலுவலருக்குப் பாலியல் புகார் தொடர்பான விசாரணையின் முதல்கட்ட அறிக்கையை விசாகா குழு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

vishaka
vishaka

By

Published : Apr 13, 2021, 11:45 AM IST

முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐஏஎஸ் (காவல் கண்காணிப்பாளர்) அலுவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறப்பு டிஜிபி அலுவலர் மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

புகார் கொடுக்கவிடாமல் தடுத்த காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையில் பணியிடத்தில் பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் மேலும் ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர்.

புகாரில் சிக்கியுள்ள சிறப்பு டிஜிபியிடம் விசாகா குழு சென்னையில் கடந்த மாதம் 26ஆம் தேதி விசாரணை நடத்தியது. இந்தப் புகார் தொடர்பாக விசாகா குழு மொத்தம் 14 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் விசாகா குழு முதற்கட்ட அறிக்கையைத் தயார் செய்தது.

இந்த அறிக்கையை விசாகா குழு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இது முதற்கட்ட அறிக்கை என்றும், முழுமையான அறிக்கை பின்னர் தாக்கல்செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details