புதுச்சேரியில் பெண் தாதா என்று அழைக்கப்படும் எழிலரசி மீது மூன்று கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், தற்போது எழிலரசி புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
புதுச்சேரி பாஜகவில் இணைந்த பெண் தாதா! - pudhucherry BJP
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பெண் தாதா எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளார்.
Female Dada Ezhilarasi has joined the pudhucherry BJP
இந்த இணைப்பு விழா காலாப்பட்டு பகுதியில் தற்போது நடந்ததாக பாஜகவினர் தெரிவித்தனர். இவ்விழாவின்போது பாஜக துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். புதுச்சேரியில் தொடர்ந்து பல்வேறு கொலை குற்றங்களில் தொடர்புடையவர்கள் பாஜகவில் இணைந்து வருவது பேசு பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரி பெண் தாதா எழிலரசி கைது - காரைக்காலில் பரபரப்பு