தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க மத்திய அரசு சூழ்ச்சி - விவசாயிகள் சங்கம் - காவேரி மேலாண்மை ஆணையம்

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தி புதிய தலைவரை உடனடியாக நியமனம் செய்திட குடியரசுத் தலைவர் முன்வர வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

union
union

By

Published : Apr 29, 2020, 2:00 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டு மக்களின் பன்னெடுங்கால போராட்டத்திற்குப்பின் காவேரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழுவையும் 2018 இல் மத்திய அரசு அமைத்தது. ஆனால், ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவர் இது நாள் வரை நியமிக்கப்படவில்லை. மத்திய நீர்வள ஆணையச் செயலாளர் மசூத் உசேன் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டு, அவரும் கடந்த 2019 இல் ஒய்வு பெற்ற நிலையில், நிரந்தரத் தலைவரை இன்னும் நியமனம் செய்யாமல் ஆணையம் முடக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழுக் கூட்டமும் பெயரளவில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் எடுக்கும் முடிவுகளை ஆணையத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். ஆணையம் அதனை செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஆணையம் தலைவர் இன்றி முடங்கியதால், ஒழுங்காற்றுக்குழுக் கூட்டம் சடங்குக் கூட்டமாகவே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 20.04.2020 அன்று முதல், காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வள ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவரால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதன் மூலம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை ஆரம்பம் முதல் தொடர்ந்து எதிர்த்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு துணை போகும் வகையில், மத்திய அரசு அதனை முடக்கும் மறைமுக நடவடிக்கையாக இதனை பார்க்க வேண்டியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வள ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசாணை!

கரோனா நோய் தாக்குதலில் உலகம் முடங்கியுள்ள நிலையில், அவசர அவசரமாக தனது அரசியல் சுயலாபத்திற்காக தமிழகம் போராடி பெற்ற உரிமையை, குழித் தோண்டி புதைக்க நினைக்கிறது வஞ்சக எண்ணம் கொண்ட மத்திய அரசு. சட்ட விரோதமாக கர்நாடகாவின் நயவஞ்சக நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை போவதற்கு குடியரசு தலைவரும் அனுமதியளித்துள்ளார்.

எனவே, தமிழக விவசாயிகளின் நலன் கருதி இந்த அரசாணையை திரும்பப் பெறுவதோடு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமனம் செய்து தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட குடியரசு தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் “ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தகுந்த இடைவெளியைப் கடைப்பிடிக்காததால் நோய்த்தொற்று அதிகரிப்பு - முதலமைச்சர் கவலை

ABOUT THE AUTHOR

...view details