தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரபல நடிகரும், டான்ஸருமான பரத் தற்கொலை - Film industry

சென்னை: மன உளைச்சல் காரணமாக பிரபல நடிகரும், டான்ஸருமான பரத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல நடிகரும், டான்ஸருமான பரத் தற்கொலை

By

Published : May 17, 2019, 7:05 AM IST

சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் தனது நண்பர்களோடு டான்ஸர் பரத் (35) வசித்துவந்தார். இவர் பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்சுடன் தொடர்ந்து இயங்கி வந்தவர். மேலும், இயக்குநர் ஏ. ஆர்.முருகதாஸின் குழந்தைகளுக்கு நடன பயிற்சியும் அவர் அளித்துவந்தார். அதுமட்டுமல்லாமல் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டான்ஸர் பரத் மன உளச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் டான்ஸர் பரத்தின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பரத்திற்கு ஒரு கையில் விரல்கள் இல்லாமல் ஊனமுற்று இருந்தாலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என நடனத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இருப்பினும் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போனதாலும், திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியாலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details