மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் இடம் பெற்ற கோரிக்கைள்,
'1. கரோனாவால் உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
2. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்டு இன்று வரை தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் 12,000 செவிலியருக்கு அரசின் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்.
3. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஆண் செவிலியர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவருடைய மருத்துவச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்' என்பன உள்ளிட்ட இந்த மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமைச்சரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
இதையும் படிங்க:'தனியார் ஆம்புலன்ஸூக்கு அதிகப் பணம் கொடுக்காதீர்கள்... இவ்வுளவுதான் கட்டணம்'