2011-15ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராகயிருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு விலக்கு - அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு விலக்கு
16:51 July 09
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று(ஜூலை.9) நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், புகார்தாரர் தரப்பினர், தங்கள் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, மனுதாரர் தரப்பில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக நிர்பந்திக்கப்படுவதால், அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பணியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து செந்தில் பாலஜிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் பிணை