தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

துணைத்தேர்வு - கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

சென்னை: துணைத்தேர்வு மைய வளாகத்திற்குள் பணி தொடர்பில்லாத நபர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை அரசு தேர்வுகள் துறை விதித்துள்ளது.

students
students

By

Published : Sep 18, 2020, 12:08 PM IST

Updated : Sep 18, 2020, 1:21 PM IST

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு, எட்டாம் வகுப்பு தனித்தோ்வர்களுக்கான தேர்வுகள், தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு ஆகியவை செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 5ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தேர்வு மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. இதில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  • தேர்வு மையத்திற்குள் நுழையும் முன்பே ஆசிரியர்கள், தேர்வர்கள் என அனைவருக்கும் வெப்பமானி கொண்டு உடல் வெப்ப சோதனை செய்யப்பட வேண்டும்.
  • தேர்வு மையத்திற்கு அருகில் உணவுப் பொருட்கள் விற்பனை நடைபெறாததை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • தேர்வு மைய வளாகத்தில் 5 இடங்களிலாவது தேர்வு அறைகளின் வரைபடத்தினை ஒட்ட வேண்டும்.
  • தேர்வு மையங்களில் தகுந்த இடைவெளி நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும்.
  • 400 சதுர அடி கொண்ட ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே உட்கார வைக்கப்பட வேண்டும்.
  • தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தேர்வர்களை தகுந்த பாதுகாப்புடன் கூடிய தனி அறையில் தேர்வெழுத வைக்க வேண்டும்.
  • தேர்வு தொடங்குவதற்கு முன்பும், பின்பும் தேர்வறைகளில் உள்ள மேசை, நாற்காலி, கதவு, ஜன்னல் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
  • கை கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
  • தேர்வு மையத்திற்குள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
  • தேர்வு மைய வளாகத்திற்குள் தேர்வுப் பணிக்கு தொடர்பில்லாத எவரையும் அனுமதித்தல் கூடாது.

உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அரசு தேர்வுகள்துறை விதித்துள்ளது.

இதையும் படிங்க:'சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்'

Last Updated : Sep 18, 2020, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details