தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

+2 தேர்வில் மதிப்பெண்களை தவறாக கூட்டிப் போட்ட ஆசிரியர்களிடம் விசாரணை - Examination

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை கூட்டிப் போடுவதில், தவறு செய்த ஆசிரியர்களிடம் அரசுத் தேர்வுத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

மதிப்பெண்களை தவறாக கூட்டிப் போட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத்துறை விசாரணை
மதிப்பெண்களை தவறாக கூட்டிப் போட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத்துறை விசாரணை

By

Published : Jul 20, 2022, 2:07 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன் பின், மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகலில் மதிப்பெண்களில் மாற்றம் இருப்பது தெரியவந்தது.

மதிப்பெண்களை சரியாக பதிவு செய்யாத ஆசிரியர்களை, பாடவாரியாக நேரில் அழைத்து அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, சுமார் 50 முதுகலை ஆசிரியர்கள் நேரில் அழைக்கப்பட்டு இன்று (ஜூலை 20) விசாரணை மேற்காெள்ளப்பட்டது. மேலும், அவர்களிடம் இதற்கான காரணம் குறித்து விளக்கக் கடிதம் பெறபட்டது. மீதமுள்ள பாடங்களுக்கு தாெடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:குரூப்-1 பதவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details