தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் கொடுக்கலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - சசிகலா

சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கூட கொடுக்கலாம், ஆனால் தமிழக மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலா ஜெயக்குமார்
சசிகலா ஜெயக்குமார்

By

Published : Oct 16, 2021, 6:02 PM IST

சென்னை: ராமச்சந்திர ஆதித்தனாரின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை ஆயிரம் விளக்கு மாலை முரசு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வன்னியரசு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, தமாக மாநில தலைவர் ஜி.கே.வாசன், செல்வ பெருந்தகை, பாஜக மாநிலத் துணைத் தலைவர் எம் என் ராஜா, இயக்குனர் கெளதமன், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது, "சசிகலா ஜெயலலிதா நினைவிடம் செல்வது பெரிய விஷயம் அல்ல. ஊடகம் தான் அதை பில்டப் கொடுத்து பெரிதாக காட்டுகிறது. பில்டப் கொடுத்தாலும் அது செயற்கையாக தான் இருக்கும்.

நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கானோர் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார்கள். அதில் சசிகலாவும் ஒன்று. அதிமுக யானை பலம் கொண்டது. ஒரு கொசு யானை மீது உட்கார்ந்து கொண்டு இந்த யானையை நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வது நகைப்புக்குரியது.

எங்களை பொறுத்தவரை, எங்கள் கட்சியில் சசிகலாவிற்கு இடம் இல்லை. அமமுகவில் அவருக்கு இடம் கொடுக்கட்டும். அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கூட கொடுக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தன்னை சிறந்த முதல்வர் என தமிழ்நாட்டு முதல்வரே தான் கூறிக் கொள்கிறார். யார் அவருக்கு விருது கொடுத்தார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. ஆளுநர் கூப்பிட்டு சொன்ன பிறகு தான் முதலமைச்சர் கோயில்களை திறக்க உத்தரவிடுகிறார். கள நிலவரம் ஆளுநருக்கு தெரிகிறது. அவர் வழிகாட்டுதல்படி தான் முதலமைச்சர் செயல்படுகிறார்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேட்டியளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், " குடிநீர், மின்சாரம், தேயிலை வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாழ்வாதாரம் கரானாவால் பாதிக்கப்பட்டுள்ளது..

மேலும், ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இயற்கையான முறையில் நடைபெறாமல் செயற்கையான முறையில் நடைபெற்றுள்ளது. இது போன்ற தேர்தல் இனிமேலும் நடைபெறக் கூடாது" என்று கூறினார்.

விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், தமிழ்நாடு அரசு ராமச்சந்திர ஆதித்தனாரின் பிறந்த நாள், அல்லது இறந்த நாளை அரசு விழாவாக முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு - சசிகலா!

ABOUT THE AUTHOR

...view details