தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய முக்கிய நிகழ்வுகள் #EtvBharatNewsToday

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்

முக்கிய தகவல்கள்
முக்கிய தகவல்கள்

By

Published : Sep 3, 2021, 6:56 AM IST

சட்டப்பேரவையில் இன்று

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்.03) வனம், சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

சட்டப்பேரவை

தாலிபான்கள் தலைமையில் ஆட்சி

ஆகஸ்ட் 15ஆம் தேதி காபூலை கைப்பற்றிய தாலிபான்கள், சுமார் 2 வாரங்கள் கழித்து, இன்று (செப்.03) ஆட்சி அமைக்கவுள்ளனர்.

தாலிபான்கள் ஆட்சி

‘மணி ஹீஸ்ட்’ வெப் சீரியஸ்

ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வங்கி திருட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரியஸின் ஐந்தாம் பாகம் இன்று (செப்.03) வெளியாகிறது.

மணி ஹெய்ஸ்ட்

டிஜிட்டல் உலகம் சுற்றும் வாலிபன்

சென்னையில் இன்று (செப்.03) எம்ஜிஆர் நடித்து ஹிட் கொடுத்த திரைப்படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் டிஜிட்டலில் வெளியாகிறது.

உலகம் சுற்றும் வாலிபன்

முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு

கரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடியிருந்த முதுமலை புலிகள் காப்பகம் இன்று (செப்.03) முதல் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் காப்பகம்

ரெட்மியின் புதிய மாடல் அறிமுகம்

இந்தியாவில், ரெட்மி செல்போன் நிறுவனத்தின் புதிய படைப்பான ‘ரெட்மி 10 பிரைம்’ செல்போன் இன்று (செப்.03) அறிமுகமாகிறது. இது, 6000mAh பேட்டரி கொண்டது.

ரெட்மி 10 பிரைம்

மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்.03) நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ABOUT THE AUTHOR

...view details