விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம்:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2020 நவம்பர் 26ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடங்கி வரும் இன்றுடன் நான்கு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதனைக் குறிக்கும் விதமாக, இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
டெல்லியில் போராடும் விவசாயிகள் ஓராண்டுக்கு பிறகு வெளிநாடு செல்லும் பிரதமர்:
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று வங்க தேசம் செல்கிறார். கரோனா பரவத்தொடங்கியபிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டிற்கும் செல்லவில்லை. முதலாவது வெளிநாட்டுப் பயணமாக வங்க தேசம் செல்கிறார்.
திருப்பத்தூர் செல்லும் முதலமைச்சர்.. கருணாஸூக்கு கடிவாளம்:
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில் இன்று முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார். இதனைக் கண்டித்து போராடத் திட்டமிட்ட முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளார்.
கரூரில் ஸ்டாலின் பரப்புரை:
கரூரில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார். இந்நிலையில் நேற்று இரவு முதல் செந்தில் பாலாஜியின் நெருக்கமானவர்களின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.