தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 1 PM - மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

etv-bhrat-tamil-top-10-news-1-pm
etv-bhrat-tamil-top-10-news-1-pm

By

Published : Aug 16, 2021, 12:51 PM IST

பெகாசஸ் உளவு விவகாரம்: விசாரிக்க குழு அமைத்த மத்திய அரசு

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காத்திருந்து ஆப்கானை கைப்பற்றிய தாலிபன்: யார் புதிய அதிபர்?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் நேற்று (ஆக. 15) கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். இந்தச் பதற்றமான சூழலில் மக்களும் அந்நாட்டை விட்டுச் செல்ல முயற்சித்துவருகின்றனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் பயணம்

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா-இந்தியா இடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திட நான்கு நாள் பயணமாக இன்று (ஆகஸ்ட் 16) நியூயார்க் செல்கிறார்.

கார்கில் நாயகன் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

கரோனா காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மீண்டும் குறையும் கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 909 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆலோசகராக தாவிடர் நியமனம்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் பி.டபுள்யூ.சி. தாவிடரை நியமனம்செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இனி கூட்டணி கிடையாது: மருத்துவரே இதுக்கு இல்லையா ஒரு முடிவு

சென்னை: 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய சாதனையாளர் ஸ்டாலின்! - வைகோ

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய வரலாற்றுச் சாதனையாளர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

அருணகிரிநாதர், ஆனைமுத்து, மதுசூதனன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம்

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் குறித்து இரங்கல் குறிப்புத் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details