தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1Pm - etv bharat top ten news one pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

By

Published : Aug 9, 2021, 12:58 PM IST

நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர்!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆகஸ்ட் 9) காலை 11.30 மணியளவில் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பிடிஆர் பெயரில் போலி மின்னஞ்சல்: 7 பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அவதூறு பரப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

127ஆவது சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு: 15 எதிர்க்கட்சிகள் முடிவு

127ஆவது அரசியல் சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் தலைமையிலான 15 எதிர்க்கட்சிகள் ஆதரவு தர முடிவெடுத்துள்ளன.

சூரப்பா மீதான ஊழல் புகார்: ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

சூரப்பா மீதான ஊழல் புகார் குறித்த விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் சமர்ப்பித்தார்.

குண்டர் சட்டத்திற்கு எதிராக பப்ஜி மதன் மனு..!

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை கடும் சரிவு: 5 நாள்களில் ரூ.1500 வீழ்ச்சி, நகை வாங்குவோர் கொண்டாட்டம்!

தங்கம் விலை கடந்த மூன்று நாள்களில் மட்டும் சவரனுக்கு 968 ரூபாய் வரை குறைந்துள்ளதால் மக்கள் கொண்டாட்டத்துடன் நகைக் கடைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

தெலங்கானா ஆடி பண்டிகை: அம்மனை வழிபட்ட தமிழிசை

தெலங்கனா ஆடி பண்டிகையான போனாலு விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வைத்து தலையில் சுமந்து சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டார்.

உத்தரகாண்ட் தூதுவராக வந்தனா கட்டாரியா- முதலமைச்சர் அறிவிப்பு

ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா, அம்மாநில பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தெரிவித்தார்.

ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜக: காய்களை நகர்த்தும் காங்கிரஸ்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டிவரும் நிலையில், அதற்கு எதிர்வினை ஆற்றும்வகையில் காங்கிரஸ் காய்களை நகர்த்திவருகிறது. அதன்படி, சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் அணிவகுப்பு நடத்துகிறது.

’இது ஸ்பேஸ் ஒலிம்பிக்...’ - விண்கலத்தில் மிதந்தபடி விளையாடி குதூகலித்த நாசா வீரர்கள்!

தங்கள் வீடுகளைப் பிரிந்து நம்மால் கற்பனை செய்ய இயலாத, பேரண்டத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்கள், விண்கலத்தில் மகிழ்ந்து விளையாடும் இந்தக் காட்சி, காண்போரை மகிழ்வித்து மெய்சிலிர்க்கவைத்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details