தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 5 PM - etv bharat top ten news five pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm

By

Published : Aug 9, 2021, 5:23 PM IST

பாஜக கொடுத்த பதவியை மறுத்த எடியூரப்பா!

கேபினெட் (அமைச்சரவை) அந்தஸ்து உள்ளிட்ட எதுவும் வேண்டாம், நான் ஒரு முன்னாள் முதலமைச்சர், அந்தச் சலுகைகள் மட்டும்போதும் என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகால நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு - முக்கிய அம்சங்கள் என்ன?

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய மனு!

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க தயார்- பாஜக!

நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாய சட்டங்கள் குறித்து பாஜக விவாதிக்க தயாராக உள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை எம்பியும், ஜார்க்கண்ட் மாநிலத் தலைவருமான தீபக் பிரகாஷ் கூறினார்.

படப்பிடிப்பில் மின் விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞர் மரணம்

வினோத் எனும் ஸ்டன்ட் மாஸ்டரின் கீழ் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாத்தியாரே டெம்ப்ளேட்டை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வரும் டெம்ப்ளேட் ஒன்று மிகப் பிரபலமாகி இணையம் முழுவதும் உலா வருகிறது.

டிபன் பாக்ஸில் வெடிகுண்டு; குழந்தைகளுக்கு குறி ?

பஞ்சாப் மாநிலம்அமிர்தசரஸ் அருகேடிபன் பாக்ஸில் மேம்படுத்தப்பட்ட ஐஇடி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பிரச்னை குறித்து அசாம் முதலமைச்சர் பிரதமருடன் ஆலோசனை

அசாம்-மிசோரம் எல்லைப் பிரச்னை குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார்.

மீராமிதுனை கைது செய்ய வேண்டும் - வன்னியரசு வலியுறுத்தல்

பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேசிய நடிகை மீராமிதுனை கைது செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.

39% உயர்வுடன் பங்குச் சந்தையில் தடம் ரோலெக்ஸ் ரிங்ஸ்

பொது பங்கு வெளியீட்டில் களமிறங்கிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ரோலெக்ஸ் ரிங்க்ஸ் லிமிட்டட், 36 விழுக்காடு உயர்வுடன் சந்தையில் இருப்பை உறுதிசெய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details