தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 11 AM - etv bharat top ten news eleven am

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am

By

Published : Aug 20, 2021, 10:50 AM IST

மீண்டும் கடுமையாகும் கட்டுப்பாடுகள்? ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட். 20) துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ரூ. 23 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் - மூவர் கைது

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 23 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

’இந்துக்களே, திமுகவிடம் உஷாராக இருங்கள்’ - ஹெச்.ராஜா எச்சரிக்கை!

ஈ.வே.ராவுக்கு மாலையிட்டு கோஷமிட்டவர்களை கோயிலுக்குள் நுழைப்பதே திமுகவின் திட்டமாக உள்ளது என்றும், இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பிட்டுக்கு மண் சுமந்த லீலை: பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிட்டு திருவிழா!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தற்போது நடைபெற்று வரும் ஆவணி மூலத் திருவிழாவின் தொடர்ச்சியாக ’பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ பக்தர்களின்றி நடைபெற்றது.

’பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 2,327 கோடி ஒதுக்கீடு’ - தமிழ்நாடு அரசு

சென்னை: 2021-2022ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் 2,327 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கீழடி: அகரம் அகழாய்வில் சுடுமண் முத்திரை கண்டெடுப்பு!

கீழடி அருகே அகரம் அகழாய்வில் சுடுமண் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

பாய் பெஸ்டியுடன் கொஞ்சி விளையாடும் ரிவால்டோ யானை!

உதகை அருகே வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்த காட்டு யானை ரிவால்டோ, மற்றொரு ஆண் யானையுடன் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடும் காணொலி வெளியாகி உள்ளது.

கேரளாவின் முதல் 24 மணிநேர தடுப்பூசி மையம் திறப்பு!

கரோனா தொற்று அதிகமாகக் கண்டறிப்படும் கேரளாவில் முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையம் நேற்று (ஆக. 19) திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் குறைய ஆரி கொடுத்த டிப்ஸ்!

நடிகர் ஆரி ’அறம் வளர்ப்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதத்தில் ஊக்குவித்துப் பேசியுள்ளார்.

ஆப்கனில் பறக்கும் விமானத்திலிருந்து மூவர் விழுந்த நிகழ்வு: உயிரிழந்த தேசிய கால்பந்து வீரர்!

ஆப்கனில், அமெரிக்க விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர்களில், அந்நாட்டின் கால்பந்து வீரரும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details