தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9AM - ஈடிவி பாரத் செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

etv
etv

By

Published : Dec 5, 2020, 9:01 AM IST

Updated : Dec 5, 2020, 2:11 PM IST

1. நிவர் புயல் பாதிப்புகள்! - மத்திய குழு இன்று பார்வை!

நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.

2. புதுவையில் தேர்தல் வியூகம் வகுக்கும் காங்கிரஸ்!

புதுச்சேரி: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முன்னிலையில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

3. ஒரு நாள் போலீஸ்... சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய துணை ஆணையர்!

சென்னை: ஐபிஎஸ் அலுவலராக தான் வரவேண்டும் என்ற கனவோடு இருந்த நான்கு வயது சிறுவனின் ஆசையை அடையாறு துணை ஆணையர் நிறைவேற்றியுள்ளார்.

4. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 3 ஆண்டு சிறை!

சேலம்: ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சென்னையைச் சேர்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

5. பத்ம விபூஷணைத் துறந்த பாதல்: 'அரசியல் செய்வதை நிறுத்துங்கள்' - முதலமைச்சர் தாக்கு!

டெல்லி: தலைநகரில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை பிரகாஷ் சிங் பாதல் திருப்பி அளித்துள்ள நிலையில், இதனை பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் விமர்சித்துள்ளார்.

6. அடையாளம் தெரியாத நபரை அடக்கம்செய்த காவலர்!

மதுரை: இறந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு காவலரே முன்வந்து அடக்கம்செய்த மனிதநேயச் செயலைப் பலரும் பாராட்டினர்.

7. சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரையை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு!

சென்னை: சின்மயா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரையை உடைத்து மூன்று லட்சம் ரூபாய் பணம் திருடுபோனது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

8. மின் ஊழியர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: ஈஞ்சம்பாக்கத்தில் ஏற்பட்ட மின்சாரப் பழுதினைச் சரிசெய்ய சென்ற பருத்தி குளத்தைச் சேர்ந்த மின்சார ஊழியர் பாக்கியநாதன், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன் ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

9. சீனா-பாக். பொருளாதார வழித்தடம்: பாதுகாப்புப் பணியில் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள்!

டெல்லி: சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்தை (சிபிஇசி) பாதுகாக்க சுமார் 25 ஆயிரம் ராணுவ வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த சீனாவும் பாகிஸ்தானும் முடிவுசெய்துள்ளன.

10. எச்ஐவி ஆராய்ச்சி செய்யும் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள்: பில் கேட்ஸ் பாராட்டு

ஜோகன்னஸ்பர்க்: எய்ட்ஸ் மற்றும் கரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க பேராசிரியர்கள் சலீம் அப்தூல் கரீம், அவரது மனைவி குவாரைஷா ஆகியோரை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

Last Updated : Dec 5, 2020, 2:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details