தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9pm - உ.பி. விபத்து

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9pm

By

Published : May 16, 2020, 8:48 PM IST

Updated : May 16, 2020, 10:07 PM IST

கரோனா பாதிப்பு - 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளதாகவும் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய சேது, கிருமி நாசினி அவசியம் - ஏ.ஏ.ஐ அறிவுறுத்தல்

டெல்லி: இந்தியாவில் விமான நிலையங்களை கண்காணித்துவரும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தனது பயணிகளுக்கு முக்கிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவு!

சென்னை: கரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோரை கண்காணிக்கும் நெஸ்ட் கேமராக்கள்

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை கண்காணிப்பதற்காக நெஸ்ட் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது

'உ.பி. விபத்து செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்' - எடப்பாடி பழனிசாமி

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 24 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கான போராளி கே. வரதராசன் காலமானார்! மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி இரங்கல்!

கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், அரசியல் தலைமைக்குழு முன்னாள் உறுப்பினரும், சங்கத்தின் அகில இந்திய துணை தலைவராக இருந்த கே.வரதராசன் இன்று காலமானார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

கைவிட்ட அரசு; நடை பயணமாய் புறப்பட்ட குடிபெயர் தொழிலாளர்கள் - நேரில் சந்தித்த ராகுல்

டெல்லி: நடை பயணமாக சொந்த மாநிலங்களுக்குப் புறப்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்களை காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

போலீஸுக்கு சல்யூட் அடித்த விஷ்ணு விஷால்

ரோனா தொற்று பரவிவரும் அபாயகரமான சூழ்நிலையில் பணியாற்றிவரும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய பணத்தை அமெரிக்கா செலுத்த வேண்டும் - சீனா

பெய்ஜிங்: ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக அமெரிக்க செலுத்த வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வேகமாக பரவ ஒபாமாதான் காரணம் - வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா வேகமாக பரவுவதற்கு, முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தின் குளறுபடிகளே காரணம் என வெள்ளை மாளிகை புகார் தெரிவித்துள்ளது.

Last Updated : May 16, 2020, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details