தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - TOP 10 NEWS 3 PM

ஈ டிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ.

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

By

Published : May 13, 2021, 3:03 PM IST

’இனி 2 வயது முதல் கோவாக்சின் தடுப்பூசி’ - டிசிஜிஐ அனுமதி

இரண்டு வயதுக்கு நிரம்பியவர்கள் முதல் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

முதல் டோஸை போட்டுக் கொண்டார் ரஜினி காந்த்

நடிகர் ரஜினிகாந்த் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார் என அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்பிக்கள் ராஜினாமா ஏற்பு!

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோரின் ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக, மாநிலங்களவை பொதுச் செயலாளர் தேஷ் தீபக் வர்மா அறிவித்துள்ளார்.

சிப்காட் தீ விபத்து: உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு!

கடலூர் மாவட்டம் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மருத்துவமனையில் படுக்கைகள் காலி: நாற்காலியில் அமர்ந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகள்!

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால் தரையில் படுத்தும், நாற்காலியில் அமர்ந்தபடியும் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பணம், வேலை இல்லாமல் புலம்பெயர்ந்தோர் எவ்வாறு உயிர் வாழ்வார்கள்? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

புதுடெல்லி: பணம், வேலை இல்லாமல் புலம்பெயர்ந்தோர் எவ்வாறு உயிர் வாழ்வார்கள்? என்று கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இவ்விவகாரத்தில் இன்று (மே.13) உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்துள்ளது.

கங்கை கரையோரம் புதைக்கப்பட்டுள்ள சலடங்கள்: கோவிட் அச்சத்தில் உள்ளூர்வாசிகள்!

லக்னோ: கங்கை நதிக்கரையோரம் மணலில் பல சடலங்கள் புதைக்கப்பட்டு இருக்கும் சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே கோவிட் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் கோவிட்-19 தடுப்பூசி: சாதகம் பாதகம் என்னென்ன?

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் உள்ள ஏதேனும் மருந்து நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து உற்பத்தி செய்ய அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

ராக்கெட் தாக்குதலின் போது நேரலை செய்த காசா ஊடகவிலயாளர்!

காசா: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக காசாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், கட்டடத்தின் மேற்கூரையில் நின்றப்படி நேரலையில் செய்தி கொடுத்துள்ளார்.

HBDSunnyLeone: சர்ச்சைகளுக்கு அஞ்சாத சன்னி லியோன்

இந்தியாவில் இத்துறை சரியாக இல்லை என நினைக்கிறேன். அதனால்தான் புரிதலற்று பேசுகிறார்கள் என்றார் சன்னி லியோன்.

ABOUT THE AUTHOR

...view details