தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - today important news in Tamil

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

By

Published : Mar 9, 2021, 3:15 PM IST

1.பேரவைத் தேர்தல் 2021 - அதிமுகவிலிருந்து விலகிய தேமுதிக

தமிழ்நாடு தேர்தல் களத்தில் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு உடனுக்குடன் நேரலையாக தொகுத்து வழங்கப்படுகிறது.

2.அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக!

அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

3.இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழ்நாடு வருகிறார்.

4.154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டி!

மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை நேற்றிரவு (மார்ச் 8) கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5.கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முக ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று(மார்ச் 9) கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

6.ராகுலை மீண்டும் தலைவராக்க இளைஞர் காங்கிரஸ் தீர்மானம்

ராகுல் காந்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்க வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

7.பொருளாதாரத்தை மீட்க என்ன வழி? டி.ஆர்.பாலு கேள்விக்கு அரசு பதில்!

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு, சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதியுதவி போன்ற பல திட்டங்களின் மூலம் வீழ்ந்த பொருளாதாரம் மேம்படும் என நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்

8.ரன்பீர் கபூருக்கு கரோனா உறுதி!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9.ஃபெடரரின் சாதனையை முறியடித்த ஜோகோவிச்!

சர்வதேச டென்னிஸ் வரலாற்றில் அதிக வாரங்கள் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்ட வீரர்கள் பட்டியலில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

10.எஸ்சிஜி மைதானத்தில் கிரிக்கெட் வீராங்கனையின் சிலை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்சிஜி) வீராங்கனையின் சிலையை நிறுவவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details