தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm - Top 10 news @ 3 pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

By

Published : Jan 8, 2021, 3:35 PM IST

1.'பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகள் அருகில் பேனர்கள் வைக்கத் தடை

ரேஷன் கடைகளுக்குள் விளம்பரத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கக் கூடாது என்றும் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கக் கூடாது எனவும் திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.பள்ளிகள் திறக்கவில்லை - திரையரங்கங்களுக்கு மட்டும் 100% அனுமதி எப்படி சாத்தியம்!

பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், திரையரங்குகளில்100 விழுக்காடு இருக்கைகளுக்கு எப்படி அனுமதி வழங்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

3.மயிலாடுதுறையில் உதயநிதியின் உருவ பொம்மை எரிப்பு

சசிகலா குறித்து அவதூறாகப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையை எரித்தனர்.

4.கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு- ஹர்ஷ் வர்தன்

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்தார்.

5.கோயிலுக்குள் பெண்ணுக்கு நடந்த கொடூரம் - இருவர் கைது

கட்டட வேலை செய்யும் பெண்ணை கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6.காட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கை குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படும் பட்சத்தில் காட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கை குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்திரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

7.கரோனாதடுப்பு ஒத்திகை - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு!

சென்னை மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு ஒத்திகையை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் பார்வையிடுகிறார்.

8.இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியிட தடை!

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9.மூன்றாவது டெஸ்ட்: சுப்மன் கில் அரைசதம்; ரோஹித் ஏமாற்றம்!

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை எடுத்துள்ளது.

10. டோக்கியோவில் மீண்டும் ஆட்டம் காட்டும் கரோனா: அவசரநிலை அறிவிப்பு!

கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தலைநகர் டோக்கியோவில் அவசரகால நிலையை அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details