தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணிச் செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - ஈடிவி பாரத் டாப் 10

ஈடிவி பாரத்தின் 7 மணிச் செய்திச் சுருக்கம்

etv bharat tamil top 10 news
etv bharat tamil top 10 news

By

Published : Jul 26, 2021, 7:07 PM IST

நாடு திரும்பிய டோக்கியோ நாயகி... அரசு கௌரவம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் விவகாரத்தில் இந்திய அரசு மட்டுமே மெத்தனம் - ப. சிதம்பரம்

பெகாசஸ் உளவு பார்த்தல் விவகாரத்தில் இந்திய அரசு மட்டுமே மெத்தனமாக உள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி சந்திப்பு: அடிபணிந்த இபிஎஸ்; அதிமுகவில் பதவியோடு ரீஎன்ட்ரி கொடுக்கும் சசிகலா

அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பில் 52 விழுக்காடு மாணவர்கள் சாட்டிங் - ஆய்வு முடிவு

ஆன்லைன் வகுப்பில் 10 விழுக்காடு மாணவர்கள் மட்டும் செல்பாேனை பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Phone surveillance: நாட்டிலேயே முதல்முறையாக விசாரணை ஆணையத்தை உருவாக்கிய மம்தா

தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க 2 நபர்கள் விசாரணை ஆணையத்தை மேற்குவங்க அரசு உருவாக்கியுள்ளது.

நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எஸ் சொன்ன உச்ச நீதிமன்றம்

நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்ட வழக்கின் அறிக்கை அடிப்படையில் வழக்குத்தொடர முடியாது என்றும், மீண்டும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடக்கம்

மழை வெள்ளத்துக்குப்பின் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை - தமிழ்நாடு அரசு விளக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை குறித்த வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது - அமைச்சர் கணேசன்

தமிழ்நாட்டில் கரோனா பரவலுக்கு பிறகு, வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

தோனி vs ரோஹித்: மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்

மே மாதம் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத இருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details