தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம் - 11 மணி செய்திச் சுருக்கம்

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

etv-bharat-tamil-top-10-news-11-am
etv-bharat-tamil-top-10-news-11-am

By

Published : Aug 24, 2021, 11:13 AM IST

காமராஜர் சாலையில் கருணாநிதிக்கு நினைவிடம் - ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளார்.

கோடநாடு: மேல் விசாரணைக்குத் தடை கோரி வழக்கு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி சாட்சி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வருகிறது.

பள்ளிகள் திறப்பு: ஆவலுடன் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்

வரும் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இது குறித்த சிறப்புச் செய்தியை இங்குக் காணலாம்.

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட் 24) கடைசி நாள், அதனால் உடனே விண்ணப்பிக்குமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

பாரமுல்லாவில் வீழ்த்தப்பட்ட 2 பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் இருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

தெலங்கானாவில் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி

செப்டம்பர் ஒன்றாம் தேதிமுதல் தெலங்கானாவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி பிரதமருடன் நரேந்திர மோடி ஆலோசனை

ஆப்கன் நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து

பாரா ஒலிம்பிக் 2020 இன்று (ஆகஸ்ட் 24) தொடங்க உள்ள நிலையில், அப்போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டு காதலியைக் கரம்பிடிக்கும் 'வலிமை' வில்லன்

ஹைதராபாத்: 'வலிமை' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் கார்த்திகேயாவுக்கு நேற்று (ஆகஸ்ட் 23) எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

திரையரங்குகள் திறப்பு - ரிலீஸுக்கு தயாரான சிண்ட்ரெல்லா

ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ’சிண்ட்ரெல்லா’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details