தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - EtvBharatNewsToday

ஆகஸ்ட் 8ஆம் தேதியின் முக்கியச் செய்திகள், நிகழ்வுகளைக் இங்கு காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

By

Published : Aug 8, 2021, 7:12 AM IST

உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்து உள்ளார். இதில், வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.

ஸ்டாலின்

கோயில்களில் வழிபாட்டுக்கு தடை

ஆடி அமாவாசையை தினமான இன்று, கோயில்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதும்கள் கோயில்களின் வெளியில் நின்றபடி வழிபாடு செய்துவிட்டுச் செல்கின்றனர்.

கோயில்களில் வழிபாட்டுக்குத் தடை

மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இன்றையப் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.49 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை

ABOUT THE AUTHOR

...view details