தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2021, 3:42 PM IST

ETV Bharat / city

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை: வண்ணாரப்பேட்டையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.

எர்ணாவூர் நாராயணன்
எர்ணாவூர் நாராயணன்

சென்னை வண்ணாரப்பேட்டை சிங்காரதோட்டம் பகுதியில் ஊரங்கு காரணமாக வேலை, வருமானமின்றி தவித்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வடசென்னை அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் 150க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அரசி, பருப்பு அடங்கிய நிவாரண பொருள்களை வழங்கினார். இதில் சங்கத்தின் செயலாளர் காமாட்சி வி.கண்ணன், லார்டு பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எர்ணாவூர் நாராயணன், “தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மேலும் வியாபாரிகளை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசு ஆவன செய்யவேண்டும். மேலும் மூடப்பட்டுள்ள வணிக நிறுவனங்கள், கடைகளின் மின்சார கட்டணத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக்கு வியாபாரிகளுக்கு காலை 8 மணி முதல் 12 மணி வரை அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details