கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு மிகவும் முக்கிய உபகரணமாக சுவாசக் கருவியான வென்ட்டிலேட்டா் அமைந்துள்ளது. ஆனால், வென்ட்டிலேட்டா்கள் நமது நாட்டில் போதுமான அளவு இல்லை. எனவே மத்திய அரசு தனியாா் தொழிற்சாலைகளிடம் வென்ட்டிலேட்டா்களை அதிக அளவு தயாரித்து கொடுத்து கரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுள்ளது.
இதையடுத்து வென்ட்டிலேட்டா்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த சரக்கு விமானத்தில் சீனா, அமெரிக்காவிலிருந்து 125 பார்சல்கள் வந்தன. அதில் வென்ட்டிலேட்டா்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள், மருந்துப் பொருள்கள் இருந்தன.
வெண்டிலேட்டா் தயாரிப்பதற்கான உபகரணங்கள் சென்னை வந்தன விமான நிலைய சுங்கத் துறையினா் அத்தியாவசிய மருத்துவப் பொருள்கள் என்ற அடிப்படையில் உடனடியாக அவற்றின் ஆய்வை முடித்து டெலிவரிக்கு கொடுத்தனுப்பினா்.
வெண்டிலேட்டா் தயாரிப்பதற்கான உபகரணங்கள் சென்னை வந்தன இதையும் படிங்க: கரோனாவை எதிர்த்து போராட்டம்... மருத்துவராக களமிறங்கிய பாஜக எம்.பி.!