தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவல் துறை அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும்: மனித உரிமைகள் ஆணையம் - citizens of country

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென காவல் துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

காவல்துறை அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும் மனித உரிமைகள் ஆணையம்
காவல்துறை அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும் மனித உரிமைகள் ஆணையம்

By

Published : May 30, 2022, 5:26 PM IST

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ’மகனின் படிப்பிற்காக பல்லாவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்ததாகவும், அவர் அங்கிருந்து படித்து வந்த நிலையில், மாடியிலிருந்து தனது மகன் கீழே விழுந்ததால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது திருட்டு வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்த காவல் துறை தன் மகனை அழைத்ததாகவும், பின் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு தங்களை துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை மூன்று வெவ்வேறு லாட்ஜ்களில் வைத்து காவல் துறையினர் மிரட்டியதோடு, ஆபாசமான வார்த்தைகளைக் கூறி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பழவந்தாங்கல் காவல் நிலைய அப்போதைய பெண் ஆய்வாளர்’ உள்ளிட்டோர் மீது புகார் அளித்திருந்தார்.

இதனை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், ’இந்த வழக்கில் மனித உரிமை மீறல் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை எட்டு வார காலத்திற்குள் இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகையை பழவந்தாங்கல் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட காவலர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சமூகத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இயலாத மக்களிடம் காவல் துறையினர் அதிகாரத்தை காட்ட கூடாது எனவும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமெனவும், அவர்கள் குற்றவாளிகளாக ஆகாத வகையில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டுமெனவும்’ அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:பட்டப்படிப்புகளை பாதியில் கைவிடுவோர் திறந்தநிலைப் பல்கலைகழகம் மூலமாக தொடர வேண்டும் - சென்னை ஐஐடி இயக்குநர் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details