தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து! - தி.மு.க

சென்னை: இன்று பிறந்தநாள் காணும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸிற்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த முதல்வர்!

By

Published : Jul 25, 2019, 2:44 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொது வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, மக்களுக்காக உழைக்கும் தாங்கள். நல்ல உடல் நலத்துடன், பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுடி வாழ இறைவனை வேண்டி என் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு, இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். “முத்து விழா”வினைக் கொண்டாடும் அய்யா அவர்கள் சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் பிறந்தநாளை பாமக நிர்வாகிகளும் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details