சென்னை: முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மே 24) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.
'கொலைநகரமாக மாறும் தலைநகரம்' - முதலமைச்சரை தாக்கும் ஈபிஎஸ் - சென்னை குற்ற செய்திகள்
சென்னையில் சமீப காலங்களில் குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிகைகளின் கருத்துகளை முடக்குவதிலேயே முழு முயற்சியில் இருப்பதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரை தாக்கும் ஈபிஎஸ்
காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் ’விடியா’ அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை சீர்படுத்தாமல் பத்திரிகைகளின் கருத்துகளை முடக்குவதிலேயே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.