தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கட்சி பின்னே நிற்கும் - விஜயபாஸ்கர் விவகாரத்தில் அதிமுக அறிக்கை - முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு, காவல் துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்துவருகிறது; இந்த விவகாரத்தில் விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

விஜயபாஸ்கர், EPS, OPS
EPS & OPS - Condemnation of CM Stalin's retaliatory action!

By

Published : Jul 22, 2021, 9:04 PM IST

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள அறிக்கையில்:

அரசுக்கு கண்டனம்

''தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன்மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழ்நாடு வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது.

திசை திருப்பும் திமுக

குறிப்பாக, அதிமுகவிற்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல் துறையை முடுக்கிவிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகி, தற்போது பிணையில் இருந்துகொண்டு திமுக அமைச்சர்கள் நீதிமன்றத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

குறுகிய காலத்திலேயே அதிருப்தி

அதனை திசைதிருப்புவதற்கு, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனையும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் திராணியில்லாமல், ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் குறுகிய காலத்திலேயே மக்களுடைய அதிருப்தியை பெற்றிருக்கிற திமுக அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.

அதிமுகவை அசைக்க முடியாது

அதிமுகவை அழித்துவிடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால், அது பகல் கனவாகவே முடியும் என்ற வரலாறு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியும்.

அதிமுக இது போன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப்பெற்ற இயக்கம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் அறிந்திருப்பார்.

எனவே, காழ்ப்புணர்ச்சியோடு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது காவல் துறையை ஏவி விட்டு அவரது வீட்டில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டர்களின் துணையோடு, இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ரெய்டு - ஓபிஎஸ், ஈபிஎஸ் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details