தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 10, 2020, 1:28 PM IST

ETV Bharat / city

இ-பாஸ் நடைமுறை மனித உரிமை மீறிய செயலா? - அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: மத்திய அரசின் உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை மாநில அரசு தொடர்வது மனித உரிமை மீறிய செயலா? என தமிழ்நாடு அரசு பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

rights
rights

மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் விஸ்வரத்தினம் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ” மத்திய அரசு மக்களின் துயரத்தை உணர்ந்து இ-பாஸ் முறையை ரத்து செய்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு இ-பாஸ் முறையை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.

இதனால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் மாவட்டத்துக்குக்கு திரும்ப சிரமப்படுகின்றனர். இ-பாஸ் முறையில் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது விசாரணையும் நடைபெற்று வருகிறது.

மருத்துவம், அவரச காரணங்கள் மற்றும் கல்விக்காக செல்ல இ-பாஸ் விண்ணப்பித்தால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இது மனித உரிமை மீறிய செயல் என்பதால் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவர் துரை.ஜெயச்சந்திரன், மத்திய அரசின் உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறிய செயலா? என தமிழ்நாடு அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மீதமுள்ள அமோனியம் நைட்ரேட் 3 நாட்களில் அப்புறப்படுத்தப்படும் - காவல் ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details